குருணாகலை - கொழும்பு பிரதான வீதியில் விபத்து! பலர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Murali Murali in சமூகம்

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியின் ரத்கல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வானக விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி மற்றும் பாரவூர்தி ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொதுஹேர பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவைளை, அக்குரஸ்ஸ- தெனியாய பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வைத்தியர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான வானொன்றும் பாடசாலை ​போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி- கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த வான், தெனியாய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமொன்றை கண்காணிப்பதற்காகச் சென்று திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.