ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ். இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இளைஞன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லியடி வதிரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில், கிறிஸ்லாந்து நாட்டு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நுழையும் நோக்கில் கிறீஸ் நாட்டை அண்மித்த வேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுக்குள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு , மலை, காடுகள் கடந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முகவர் ஊடாக வெளிநாடு சென்ற இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா சென்ற இளைஞன் ஒருவர் பனாமா காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...