இலங்கையின் சில இடங்களில் வளிமண்டலத்தில் பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையின் சில இடங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக பேராசிரியர் எச்.எம்.டி.ஜி.ஏ.பிட்டவல தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இதனால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். மைக்ரோ பிளாஸ்டிக் துகள் மிக நுண்ணிய அளவானவையாக காணப்படுகின்றன.

எனவே அவை சுவாசத்தினூடாக உட்செல்லும் சாத்தியம் காணப்படுவதுடன் இதன் மூலம் நோய்த்தாக்கங்களும் ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers