மட்டக்களப்பில் யானை தாக்குதலில் விவசாயி பலி

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனன்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சந்திவெளி, திகிளிவெட்டை பிரதேசத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ஆறுமுகம் ரவிச்சந்திரன் என்ற என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பிரதேசத்தில் தனக்குச் சொந்தமான வயலில் இரவு காவலுக்காக சென்ற வேளையிலே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...