தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைக்குமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் சமூக ஊடகங்கள் வழியாக மிக வேகமாக மக்களிடையே பகிரப்படுவதை காண முடிவதாகவும் இதனால், தமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைக்கக் கூடிய கடவுச் சொல் போன்ற நடைமுறைகளை கையாளுமாறும் தமது தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை சேமித்து வைக்கும், இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய மென்பொருள் சாதனங்களை வேறு ஒருவரின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க அவற்றை பாதுகாப்பாக வைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தள கடவுச் சொற்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Offers