உயிரியல் மாணவனாக நடித்து பாடசாலை மாணவியை ஏமாற்றி நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கம்பஹா நகரில் பகுதி நேர வகுப்பொன்றில் உயிரியல் விஞ்ஞானம் பயிலும் மாணவராக சேர்ந்த அங்கு கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவியுடன் பழகி, அந்த மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அதனை புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படும் 27 வயதான நபரை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்திற்கு அருகில் உள்ள பிரதேசம் ஒன்றில் வசித்து வரும் திருமணம் ஆகாத நபர் எனவும் இவர் யுவதிகளை ஏமாற்றி தவறாக செயல்களில் சம்பந்தப்படுத்துவதற்காக பகுதி நேர வகுப்புகளில் மாணவர் போல் சேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் இதேவிதமாக 15 வயதான பாடசாலை மாணவியுடன் பழகி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் ஒத்திவைத்த சிறைத் தண்டனையை வழங்கி இருந்த நிலையில், மேலும் ஒரு யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய பின்னர், பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கம்பஹா குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குறிப்புகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு தொலைபேசி ஆய்வு அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டையை பெற்று, யுவதிகளை பழகி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இணையத்தளங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் கணனி மற்றும் இரண்டு அடையாளகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Latest Offers

loading...