இலங்கையில் வாழும் அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இங்கு வாழும் அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இலங்கையில் வாழும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றச்சூழ்நிலை வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமது தூதரகம் தொடர்ந்தும் உரிய தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கும் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் சுற்றுலாத்தளங்களில் முக்கியத்துவம் மிக்க இடமாக தற்போதைக்கு இலங்கையை கருதவேண்டாம் என்றும் தூதரகம் தமது பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது.

ஈரானின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் க்வாசிம் சொலேய்மானி அமெரிக்க தாக்குதல் ஒன்றில் அண்மையில் கொல்லப்பட்டமையை அடுத்தே இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Latest Offers

loading...