புத்துவெட்டுவான் பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வதாக மக்கள் விசனம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - புத்துவெட்டுவான், முதிரைச்சோலை பகுதியில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வு செய்யப்படுகின்ற போதும் தமது பகுதிகளில் எந்தவித அபிவிருத்திகளும் இல்லை என இதனைச் சூழவுள்ள கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புத்துவெட்டுவான், மருதன்குளம், ஐயன்கன்குளம் போன்ற கிராமங்களை அண்மித்துக் காணப்படுகின்ற புத்துவெட்டுவான், முதிரைச்சோலை பகுதியில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த பகுதிகளில் கிரவல் அகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும், இந்த பிரதேசத்தில் 25 தொடக்கம் 30 அடி ஆழத்திற்கு மேல் இவ்வாறு கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் பாரிய குழிகள் ஏற்பட்டு நீர்தேங்கி காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாரிய குழிகள் காணப்படுவதனால் எதிர்காலத்தில் கால்நடைகள் வீழ்ந்து இறக்க கூடிய ஆபத்து நிலை காணப்படுவதாகவும், தமது பகுதியில் இருந்து பெருமளவான கிரவல் மண் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதும் தமது கிராமத்திற்கான பிரதான போக்குவரத்து வீதி கூட இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் துயரங்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...