தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனொருவன் சடலமாக மீட்பு!

Report Print Kanmani in சமூகம்

தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

12 வயதுடைய பாடசாலை மாணவனொருவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்தின் பின் எவ்வித சத்தமும் இன்றி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் சென்று பார்த்த போது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...