யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாள்கள் மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் யாழ்.பரமேஸ்வராச் சந்தியில் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து இன்று காலை இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இவ் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Latest Offers

loading...