சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இல்லை

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் கானியா கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க இலங்கை வந்த சுவிஸ் புலனாய்வு குழுவினர் விசாரணை அறிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளனர்.

சுவிஸ் புலனாய்வு குழுவினர் மேற்கொண்ட அடிப்படையான விசாரணைகளில் கானியா கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை உறுதிப்படுத்த எந்த சாட்சியங்களும் இல்லை என தெரியவந்துள்ளது.

இலங்கை புலனாய்வு பிரிவினரும் சுவிஸ் புலனாய்வு குழுவினருடன் விசாரணைகளில் கலந்துகொண்டதுடன் கானியா கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் இடங்களையும் சுவிஸ் புலனாய்வு குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் செய்தியிலும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் கானியாவின் சொத்து விபரங்கள் தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. கானியா சுவிஸ் தூதரகத்தில் பிரதி குடியேற்ற அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். இலங்கையில் இருந்து சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் தஞ்சம் கோரும் நபர்களை பரிந்துரைக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆயிரத்து 317 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாகவும் இலங்கை தமிழர்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் செலுத்தி சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளதாகவும் இவர்கள் எவரும் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியவர்கள் அல்ல எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...