மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இரண்டு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்தவர்களே உழவு இயந்திரங்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers