திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வீடொன்றில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் நேற்று கிண்ணியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா ரகுமானிய்யா நகரைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன், இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Latest Offers

loading...