வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Report Print Rusath in சமூகம்

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மட்டக்களப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் பெய்த பலத்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் பெரும்பாலான நெல் வயல்கள் முற்றாகச் சேதடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் துரித கதியில் நிவாரணங்களை வழங்கினால்தான் அதனை வைத்துக் கொண்டு தாம் எதிர்வருகின்ற சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடலாம் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப்பரப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழையை நம்பி மேற்கொள்ளும் பொரும்போக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அவர்களது வாழ்வாதாரத் தொழில் பாதிப்படைந்துள்ளதால் மிகவும் வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் மற்றும் கமநல காப்பறுத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமைடைந்துள்ள நெற்செய்கை தொடர்பான விபரங்களைத் திரட்டி வருகின்றோம்.

இதுவரையில் 15,000 விவசாயிகள் தமது விபரங்களை வழங்கியுள்ளார்கள், இவற்றினைவிட மாவட்டத்திலுள்ள அனைத்து கமநல கேந்திர நிலையங்களுடாக பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் திரட்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Latest Offers