யாழ் முதல்வருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டை சந்தித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இவ் விசேட சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு முதல்வர் மாநகரத்தின் முதற் குடிமகனாக மாநகர மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும், வரவேற்பினையும் தெரிவித்துக் கொண்டார்.

முதல்வரிடம் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மாநகரசபையின் செயற்றிட்டங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்திருக்கின்ற செயற்றிட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதல்வர் விளக்கினார்.

குறித்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முதல்வர் மாநகரசபை சார்பில் நினைவுச் சின்னம் ஒன்றையும் ஆளுநருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers

loading...