முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால், கிழக்கு பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அப் பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று குறித்த அகழ்வு பணி இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் படையினர் முன்னிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்தவகையில், இதன்போது எவ்வித பொருட்களும் கிடைக்கப்படாத நிலையில், அகழ்வு பணிகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

Latest Offers

loading...