தாபரிப்பு பணம் செலுத்த தவறியவருக்கு 35 மாத கடூழிய சிறைத்தண்டனை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை-கிண்ணியா பகுதியில் 3 இலட்சத்து 85,000 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்த தவறிய நபருக்கு 35 மாதம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் கிண்ணியா- குட்டிகராச்சி பகுதியைச் சேர்ந்த வஹார்தீன் நிஸ்புல்லா எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- 2012 ஜனவரி மாதம் முதல் 2015 ஜூலை மாதம் வரை 43 மாதங்கள் மூன்று இலட்சத்து 85,000 ரூபா தாபரிப்பு பணம் செலுத்தாமல் தலைமறைவாக இருந்த நிலையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் பொலிசாரினால் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...