இன்புலுவன்சா வைரஸ் பரவுகை தொடர்பாக வெளியாகி வரும் தகவல் பொய்யானது

Report Print Ajith Ajith in சமூகம்

சமூக வலைத்தளங்களில் 'இன்புலுவன்சா' வைரஸ் பரவுகை தொடர்பாக வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இது தொடர்பில் எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை என்று சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலத்தின் போது 'இன்புலுவன்சா' பரவுகை அதிகரிப்பது இயல்பானதாகும்.

எனினும் கடந்த வருடம் நவம்பர் மாதம் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த வைரஸ் பரவுகையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்று ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாறாக 2019 நவம்பரை காட்டிலும், டிசம்பரில் இந்த வைரஸ் பரவுகை குறைந்திருந்தது. இன்புலுவன்சா வைரஸ் தொற்றின் போது குளிர் காய்ச்சல் போன்ற குணங்குறிகள் இருக்கும்.

இது குழந்தை பேறுக்காக காத்திருக்கும் தாய்மாருக்கும், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை உரிய சுகாதார பழக்க வழங்கங்கள் மூலமே தடுக்கமுடியும் என்று அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...