படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவேந்தல் நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 11வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் உட்பட ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர் நீத்த ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோரினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...