பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணகல தோட்டம் 10ம் கட்டை கீழ் பிரிவு பிரதான பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதையினை கடந்த 30 வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இப்பகுதியில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்த போதும் கடந்த நாட்களில் நிலவிய கடும் மழை காரணமாக இந்த பாதை பாரிய மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிகளவிலான பயணிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பாதையினை பயன்படுத்தும் மாணவர்கள் சுமார் 4 km தூரம் பேருந்துக்களில் ஒரு நாளைக்கு ஒரு தடவை 12 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers