ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொடரும் அழுத்தம்! மேல்நீதிமன்ற நீதிபதிகள் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நீதிபதிகள் உட்பட்டவர்களின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று சட்டத்தரப்பினர் கோரியுள்ளனர்.

மேல்நீதிமன்ற நீதிபதிகள் சம்மேளனம் இந்தக்கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளது.

சில நீதிபதிக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த உரையாடலில் தொடர்புடைய நீதிபதிகளின் குரல்கள் நிரூபிக்கப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகவே கருதப்படும் என்றும் நீதிபதிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.