தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் முன்பாக உள்ள நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூபியில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.மாநகர மேயர் ஆனல்ட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியற்பிரமுகர்கள், சமூக அமைப்பினர், தமிழுணர்வாளர்கள் மற்றும் பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.