சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று வீடு திரும்பிய வான் விபத்து: 5 பேர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கினிகத்தேனை தியகல - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குடும்பமொன்றே இன்று காலை இவ்விபத்தினை எதிர்நோக்கியுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த 5 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில், வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கம்பளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.