கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீர் இடைநிறுத்தம்

Report Print Steephen Steephen in சமூகம்

கர்ப்பிணி தாய்மாருக்கு கடந்த அரசாங்கம் மாதாந்தம் வழங்கி வந்த போசாக்கு பொதிகளை வழங்குவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப்சிட்டி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக சில கோப் சிட்டி வர்த்தக நிலையங்களில் அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த ஆலோசனைக்கு அமைய தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், மீண்டும் போசாக்கு பொதிகளை வழங்கும் திகதியை தெரிவிக்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய சீருடைக்கான உறுதிச்சீட்டின் பெறுமதியும் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் பெறுமதியான உறுதிச்சீட்டின் பெறுமதி 500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சில தினங்களாக இது சம்பந்தமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அரசாங்கம் இதற்கு தெளிவாக பதில் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.