கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Report Print Malar in சமூகம்

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்றிரவு 10 மணி தொடக்கம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.