பேருந்தில் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் குழு

Report Print Steephen Steephen in சமூகம்

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர்களாக இரண்டு பெண்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலாங்கொடை நகரில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று மாலை இந்த பெண்களை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இவர்கள் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் இவ்வாறான கொள்ளையில் ஈடுபடும் குழுவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.