வவுனியாவில் ஔவையார் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்
38Shares

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நினைவுப் பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், வெளிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.