மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியா நகரில் நடைபெற்றுள்ளது.
மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொது சுடரை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை ஏற்றியுள்ளார்.
அத்துடன் அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் மலையக உரிமை குரல் தலைவர் ராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.