முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

Report Print Mohan Mohan in சமூகம்
56Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற காரணத்தினால் தனியார் எரிபொருள் விற்பனையாளர்களினால் வழமைக்கு மாறாக அதிகளவான எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பெற்றோல் முடிவுற்றது என்ற பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனியார் எரிபொருள் விற்பனை நிலையங்களில் தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.