வெளிநாட்டவர் ஒருவரை நெகிழச் செய்த இலங்கையர்! உலகளாவிய ரீதியில் பாராட்டு

Report Print Vethu Vethu in சமூகம்
510Shares

இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரின் கையடக்க தொலைபேசி தவறவிடப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹபரண பிரதேசத்தில் வீதியில் விழுந்து கிடந்த கையடக்க தொலைபேசியை உரியவரின் கையியே கொடுத்த இலங்கையரின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவு இடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குழு ஒன்று, தம்பலு விகாரைக்கு சென்றுள்ளளது. அங்கு வாகனம் நிறுத்துமிடத்தில் ஸ்பெயின் நாட்டவர்களில் ஒருவர் ஆடை மாற்றியுள்ளார்.

இதன்போது அதிக பெறுமதியான iphone 11 pro கையடக்க தொலைபேசியை வேனின் மீது வைத்துவிட்ட மறந்து வாகனத்திற்குள் ஏறியுள்ளார்.

அங்கிருந்து ஹபரண நோக்கி செல்லும் போது வேனின் மீதிருந்த கையடக்க தொலைபேசி கீழே விழுந்துள்ளது.

அதனை அவதானிக்க இலங்கையர் ஒருவர் வேனின் பின்னால் 3 கிலோ மீற்றர் வரை துரத்திச் சென்று அதனை மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

கையடக்க தொலைபேசியை பெற்றுக்கொண்ட ஸ்பெயின் நாட்டவர், இலங்கையருக்கு பரிசு ஒன்றை வழங்க முற்பட்டுள்ளார். எனினும் குறித்த இலங்கையர் “வேண்டாம் எல்லோரும் மனிதர்கள் தானே” என கூறி தவிர்த்துள்ளார்.

இந்த நபரின் செயலை பார்த்த வெளிநாட்டவர், இலங்கையை போன்று நாட்டில் உள்ளவர்களின் செயற்பாடும் மிகவும் அழகானதென குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு உலகளாவிய ரீதியில் பலரும் வாழ்த்தி கருத்து வெளியிட்டுள்ளனர்.