தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

Report Print Murali Murali in சமூகம்

தனமல்வில - சமாதிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற போதிலும், உயிரிழந்தவரின் சடலம் இன்றே கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குமாரகம என்ற பகுதியை சேர்ந்தவரே 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமாதிகம என்ற இடத்தில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் தலைப்பகுதியிலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தனமல்வில தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.