மாவீரர் துயிலும் இல்லம் காணி இராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு: பணிக்குழு குற்றச்சாட்டு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்து வருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மாவீரர் இல்லம் பணிக்குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில்,

எவ்வித அனுமதிகளை பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இராணுவத்தினரின் ஆளுகைக்குள் உள்ள பகுதியை தனிநபர் ஒருவர் கனரக வாகனம் (ஜேசிபி) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் சுத்தம் செய்ய பயன்படுத்திய கனரக வாகனம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, அபகரிக்கும் பகுதி போரில் வீர மரணமடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை புதைத்த பகுதி.

இவற்றைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்கு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுக்கிறோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிர்வாகத்தினர் இராணுவ முகாமுக்கு சென்று குறித்த சம்பவம் தொடர்பாக வினவிய பொழுது, இராணுவத்தினர் தமக்கும் குறித்த அபகரிப்புக்கும் தொடர்பில்லை எனவும் இதனை பிரதேச செயலாளர் ஊடாக அணுகுமாறு தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...