10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பதிவுகளை மேற்கொள்ளாத குடும்பத்தினர்

Report Print Sumi in சமூகம்

வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வழங்க முன்வந்துள்ளபோதும் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என வல்வெட்டித்துறை நகர பிதா கருணாகரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்தறை நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்விடயத்தினை நகரபிதா கூறியுள்ளார்.

3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு, மாதாந்தம் 10ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...