கிணற்றில் விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பரிதாப மரணம்

Report Print Malar in சமூகம்

பொலன்னறுவை, பகமுண பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பகமுண - புவக்கஹ உல்பத, தெற்கு பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம் பகமுண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...