கல்லூரி கொடியை வானூர்தியில் பறக்கவிட்டு 150ஆவது வருட பூர்த்தியை கொண்டாடிய பாடசாலை மாணவர்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், பாடசாலை மைதானத்தில் இன்று காலை மாபெரும் நடை பவனி ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்லூரி கொடியானது வைபவ ரீதியாக வானூர்தி மூலம் மன்னார் மாவட்டம் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நடைபவனி பாடசாலையை வந்தந்தடைந்ததையடுத்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...