வாழைச்சேனை - குருந்திநகர் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டக்களுடன் ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, குருந்திநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேடுதலில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ரி 56 ரக துப்பாக்கியை உர பை ஒன்றில் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். துப்பாக்கியுடன் 27 தோட்டக்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த துப்பாக்கி காட்டுப் பகுதி ஒன்றில் இருந்து தனக்கு கிடைத்ததாக சந்தேகநபர் அதிரடிப்படையினரிடம் கூறியுள்ளனர்.

சந்தேகநபர் துப்பாக்கியுடன் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...