யாழ்.வடமராட்சி பகுதிக்கு அங்கஜன் இராமநாதன் விஜயம்

Report Print Sumi in சமூகம்

யாழ்.வடமராட்சி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது அவர் ஆராய்ந்துள்ளார்.

"நிறைவான கிராமம்" எனும் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்போகின்ற செயற்திட்டத்தில் எதனை முன்னுரிமைப்படுத்துவது என்பதனை ஆராய்வதற்காகவே அங்கஜன் இராமநாதன் இந்த கள விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.

அந்தவகையில், குருநகர் மற்றும் பாசையூர் பகுதி மக்கள் அங்கஜன் இராமநாதனிடம் தமது பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...