மோதலில் ஈடுபட்ட கொழும்பு பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களையும் ஜனவரி 13 வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கறுவாத்தோட்ட காவல்துறையினர் இவர்களை இன்று நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

இந்தநிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் இரண்டு மாணவர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகினர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Offers

loading...