பணம் கொடுக்க மறுத்த தாய்! 17 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் 17 வயது சிறுவன் விபரீத முடிவினை எடுத்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்றிரவு அலரி விதைகளை சாப்பிட்ட நிலையில் கந்தளாய் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் மூன்றாம் குலனி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு அலரி விதைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தினமும் தாயிடம் பணம் கேட்டு சண்டை பிடிப்பதாகவும், சம்பவ தினமும் பணம் கேட்டு சண்டையிட்ட நிலையில் தாய் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்தே அவர் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.