வவுனியா நகரசபை பூங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபை பூங்கா மற்றும் நகரசபை வளாகம் என்பவற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை வளாகம் மற்றும் தினமும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வந்து செல்லும் நகரசபை பூங்கா என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் நகரசபை பூங்கா மற்றும் நகரசபை வளாகம் ஆகிய இரண்டிற்கும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கையில்,

இங்கு டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இது உங்களுக்கும் அயலவர்களுக்கும் ஆபத்தானது.

எனவே உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நுளம்பு பெருகும் இடங்களையும் அகற்றி நுளம்பு பெருகும் இடங்கள் இல்லை என்பதினை மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறும், இவ் அறிவித்தலை அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் 826 இற்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers