மத்தள விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானம் பறவையுடன் மோதியமை உறுதி

Report Print Ajith Ajith in சமூகம்

எமிரேட்ஸூக்கு சொந்தமான 777 போயிங் விமானம் ஒன்று மத்தளை விமான நிலையத்துக்கு சென்று திரும்பியபோது பறவை ஒன்றுடன் மோதியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையம் வழமையான பணிகளில் ஈடுபடாமல் அவசரமான விமான தரையிறங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் 18ஆம் திகதியன்று காலநிலை சீர்கேட்டினால் டுபாயில் இருந்து கட்டுநாயக்கவுக்கு சென்ற எமிரேட்ஸின் விமானம் மத்தளவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதேவேளை தரையிறக்கப்பட்ட குறித்த விமானம் மீண்டும் புறப்பட்ட வேளையில் பறவையுடன் மோதியுள்ளது.

இதன்போது விமானத்தில் 73 பயணிகள் இருந்துள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்றபோதும் அதனால் விமானத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஏற்கனவே மத்தள விமான நிலையப் பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் ஏப்ரலில் 170 பயணிகளுடன் மத்தளவில் தரையிறங்கிய ப்லைடுபாய் விமானம் பறவையுடன் மோதியமை குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் பறவைகள் மோதுவது பொதுவாக இடம்பெறுவதில்லை. எனினும் இலங்கையில் 2018ஆம் ஆண்டில் இவ்வாறான 83 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 42 சம்பவங்கள் கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...