ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறையதிகாரி கைது

Report Print Steephen Steephen in சமூகம்

வெலிக்கடை சிறைச்சாலையின் தொழில் ஆணையாளர் கீழ் சேவையாற்றும் சிறையதிகாரி ஒருவர் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற போதே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 1000 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த நபர் இதற்கு முன்னர் களுத்துறை சிறைச்சாலை பணியாற்றியுள்ளார்.

களுத்துறையில் இருந்து ஹொரணை நோக்கி சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers

loading...