ஜேர்மனியிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணொருவரின் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தென்னிலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜேர்மன் நாட்டு பெண்ணிடமே பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அழுத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் நீண்ட காலமாக தங்கியிருந்த குறித்த பெண்ணிடம் 80 இலட்சம் ரூபா பெறுமதியான, கைக்கடிகாரம், தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அழுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வெளிநாட்டு பெண் சில வருடங்களாக அழுத்கம பகுதியில் வசித்து வருகின்றார். தனது சொந்த செலவில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு வீட்டில் வாழ்ந்துள்ளார்.

குறித்த வீட்டில் இருந்த பாதுகாப்பு கமரா கட்டமைப்பையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.