கோட்டாபயவின் திட்டத்தில் கரிபூசிய விஷமிகள்

Report Print Tamilini in சமூகம்

யாழ்.கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனம் தெரியாத நபர்களால் நேற்றிரவு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீதே சனிக்கிழமை இரவு இனம் தெரியாதோர் கழிவு எண்ணெய்யை ஊற்றியுள்ளனர்.

தாம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் வகையில் வரைந்த சுவரோவியத்தில் சிலர் கழிவு எண்ணெய்யை ஊற்றியுள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் இனம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சுவரோவியத்தை வரைந்தவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Latest Offers

loading...