கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவரொருவர் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்

Report Print Kumar in சமூகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள மாணவன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட 01ம் ஆண்டு மாணவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தலவாக்கலை - லிந்துலை பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவனே நேற்று முன்தினம் முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் நேற்று முன்தினம் மாலை வரையில் விடுதிக்கு திரும்பாத நிலையில் மருத்துவ பீட உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமையினால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் மாணவனை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest Offers

loading...