கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் பெரும் துயரங்களை அனுபவிக்கும் தாய்

Report Print Kanmani in சமூகம்

இறுதி யுத்தத்தின் போது பல கொடூரமான நிகழ்வுகளையும், துயரங்களையும் தாங்கி நின்ற பூமியே இந்த புதுகுடியிருப்பு பகுதி.

இங்கு வாழும் மக்கள் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளற்ற நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி இருப்பதுடன், பல துயரங்களை அனுபவித்து கொண்டு தனது வாழ் நாளை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுகுடியிருப்பு - கைவேலி, 2ம் வட்டாரத்தினை சேர்ந்த சுவேந்திரன் நாகராணி, கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் தன் வாழ்வினை கழிக்க போராடி வருகின்றார்.

மிகவும் துயரத்தின் மத்தியில் தமது அன்றாட வாழ்வை கழித்து வரும் இவர்களது வாழ்வில் நல் உள்ளங்கள் நினைத்தால் ஒளியேற்ற முடியும்.

அந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து செய்யும் உதவி அவர்களது வாழ்க்கையில் சிறந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

இவர்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் துயரங்களை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ள காணொளி உங்கள் பார்வைக்காக,

இவர்களுக்கு உதவி செய்ய 94212030600 அல்லது 94767776363 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Latest Offers

loading...