புதுக்குடியிருப்பு, வேணாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

Report Print Vanniyan in சமூகம்
71Shares

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 7 மணியளவில் பாடசாலை வாயில் முன்பாக ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது 'கிராம மட்ட பாடசாலைகளுக்கு வினைத்திறன் அற்ற அதிபர்களை நியமிக்காதீர்கள், எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள்' என்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்திருந்தனர்.

இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் நலன்விரும்பிகள், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.