நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் கொண்டாட்டத்திற்கான வேலைகள் ஆரம்பம்

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் கொண்டாட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆலய வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மூன்று நாட்களுக்கு முன்னரே பொங்கல் நிகழ்விற்காக ஒலிபெருக்கி பயன்படுத்த பொலிஸாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

என்ற போதிலும் இது வரையில் பொலிஸார் அந்த அனுமதிகள் எதனையும் வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.