தைப் பொங்கலை கொண்டாடத் தயாராகும் யாழ்.மக்கள்

Report Print Sumi in சமூகம்

இந்து மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை நாளையதினம் கொண்டாடுவதற்கு யாழ்ப்பாண மக்கள் பல்வேறு வகையிலும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதோடு, புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலாவது தைப்பொங்கல் பண்டிகை மக்கள் மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருவதை காணக்கூடியதாக உள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டின் பலபாகங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன், தமிழ் மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.