தைப்பொங்கலுக்காக பொருட்கள் கொள்வனவில் முனைப்புடன் ஈடுபட்டுள்ள மன்னார் மக்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் தைப்பொங்கலுக்காக பொருட்களை கொள்வனவு செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சூரியனுக்கு நன்றி கூறும் வகையில் தமிழர்கள் நாளைய தினம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடவுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் மக்கள் பொங்கல் பண்டிகைகளுக்கான பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதேவேளை நாளை தைத்திருநாளை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளையதினம் காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.